என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுட்டு கொலை
நீங்கள் தேடியது "சுட்டு கொலை"
தலைநகர் டெல்லியில் தலைமை காவலர் ராம் அவ்தார் அடையாளம் தெரியாத நபர்களால் நேற்று நள்ளிரவு சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShotDead
புதுடெல்லி:
டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
ஜேத்பூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவரை அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர்
சரமாரியாக சுட்டனர். அதன்பின் அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நள்ளிரவில் தலைமை காவலர் ராம் அவ்தார் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது தலைநகர் டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #ShotDead
பாகிஸ்தானின் பெஷாவர் மாகாணத்தில் அவாமி தேசிய கட்சியை சேர்ந்த பிரமுகர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள அவாமி தேசிய கட்சியை சேர்ந்தவர் மொகமது இப்ரார் கலீல். இவர் இன்று பெஷாவர் மாகாணத்தில் டெக்கால் பகுதியில் தனது உறவினர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் கலீலை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
காயமடைந்த அவரையும், உறவினர் அர்ஷத்தையும் மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெஷாவரில் பட்டப்பகலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் அவாமி தேசிய கட்சி பிரமுகர் ஹரூண் பிலோர் உள்பட12 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
×

X